கொரோனா பரவலை தடுக்க | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' பரவலை தடுக்க

Added : மார் 21, 2020
Share

கோவை:கோவை மாநகராட்சியில், 'கொரோனா' வைரஸ் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.கோவை மாநகராட்சியில், 'கொரோனா' வைரஸ் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் சுகாதார அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள், மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் அதிகளவு கூடும் இடங்களான ரயில்வே ஸ்டேஷன், அனைத்து பஸ் ஸ்டாண்டுகள், பஸ் ஸ்டாப்கள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணிகள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.சுகாதார பணியாளர்கள் கையுறை மற்றும் பாதுகாப்பு உடை கவசம் அணிந்து, 100 வார்டுகளிலும் ஸ்பிரேயர்கள் மற்றும் பேட்டரி வாகனங்கள் மற்றும் வார்டுக்கு, எட்டு வீதம், 800 பணியாளர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அனைத்து மண்டல அலுவலகங்களிலும் பொதுமக்கள் கைகளை கழுவுதல் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மருத்துவ குழுவினரால் மேற்கொள்ளப்படுகிறது.பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல், சளி, போன்றவை இருந்தால், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பு முன்னேற்பாடு பணிகளை மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சி அலுவலர்கள், துாய்மை பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் மேற்கொண்டு வருகின்றனர் என, மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X