சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார், டாரஸ் லாரி மோதல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

மதுக்கரை:நாச்சிபாளையத்தில் இருந்து வேலந்தாவளம் செல்லும் வழியில் கோழி மடை உள்ளது. நேற்று மாலை, இவ்வழியே கோவை நோக்கி, டாரஸ் லாரி வந்தது. அதே நேரத்தில், வேலந்தாவளம் நோக்கி ஒரு கார் சென்றது. எதிர்பாராதவிதமாக லாரி, கார் மீது மோதியது. காரை ஓட்டி வந்தவர் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரு பெண்கள் உள்பட மூவர் காயமடைந்தனர். அங்கு சென்ற மதுக்கரை போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்தவர் சடலம், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.போலீஸ் விசாரணையில். உயிரிழந்தவர், அப்பகுதியில் உள்ள, தன்னாசியப்பன் கோவில் தோட்டத்தை சேர்ந்த சிவப்பிரகாஷ், 50, என தெரிந்தது. காயமடைந்தவர்கள், அவரது மனைவி சண்முகவடிவு,48, மகன் சிபி சக்கரவர்த்தி,20, மகள் ஸ்ரீஅபிநயா,18 என்பதும் தெரிந்தது.காரை ஓட்டிய சிவப்பிரகாஷ், 'சீட் பெல்ட்' அணியாமல் இருந்திருக்கிறார். விபத்து ஏற்பட்டதும், ஏர் பலுான் ஓபன் ஆகவில்லை. அவரது மனைவி சண்முகவடிவு 'சீட் பெல்ட்' அணிந்திருந்ததால், ஏர் பலுான் ஓபன் ஆகி உயிர் தப்பினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X