இந்தியா

சம்பளத்துடன் பேறுகால விடுப்பு தனியார் பள்ளி சம்மேளனம் வலியுறுத்தல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: பேறுகால விடுப்பு ஊதியத்துடன் வழங்காத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என புதுச்சேரி தனியார் பள்ளி ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து புதுச்சேரி தனியார் பள்ளி ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் பொது செயலாளர் கிறிஸ்தோபர் விடுத்துள்ள அறிக்கை:அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் மகளிர்க்கு பேறுகால விடுப்பாக 26 வாரங்கள் ஊதியத்துடன் வழங்க இந்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் புதுச்சேரியில் உள்ள பல தனியார் பள்ளிகளில் சில அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த ஆணை நடைமுறைப்படுத்தவில்லை.சில பள்ளிகள் 12 வார விடுமுறையை சம்பளம் இல்லாமல் வழங்குகிறது. சில பள்ளிகள் அவர்களுக்கு பதிலாக வேறு ஒருவரை பணியமர்த்தி அவர்களுக்கான ஊதியத்தை அந்த ஆசிரியையே கொடுக்க வேண்டும் என்கின்றனர். இவை அனைத்துமே பேறுகால விடுப்பு ஆணைக்கு எதிரானது.ஆகவே கல்வித் துறை இயக்குனர் இந்த விஷயத்தில் தலையிட்டு கல்வித் துறையின் அனுமதிப் பெற்று இயங்குகின்ற அனைத்து பள்ளிகளிலும் இந்த பேறுகால விடுப்பு 26 வாரங்கள் ஊதியத்துடன் வழங்க ஆவண செய்ய வேண்டும்.இந்த ஆணை வெளியிட்ட 13.04.2017 தேதியில் இருந்து விடுமுறை கொடுக்கப்படாத ஆசிரியைகள், ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்க அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றிக்கை அனுப்பிட வேண்டும்.பேறுகால விடுப்பு ஊதியத்துடன் வழங்காத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் புதுச்சேரி அரசும், கல்வித் துறையும் பேறுகால விடுப்பு விஷயத்தில் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்களில் அமல்படுத்தி தீவிரமாக கண்கானிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X