இந்தியா

கைகளை சுத்தமாக கழுவுவதற்கு அரசு அலுவலகங்களில் வசதி

Added : மார் 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: கலால் துறை அலுவலகத்தின் மூன்று வாசல்களிலும் கைகளை கழுவுவதற்கு வசதியாக தண்ணீர் கேன், ேஹண்ட வாஷ் வைக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில், அரசு அலுவலகங்களின் வாசலில் கைகளை கழுவுவதற்கு வசதியாக தண்ணீர், ேஹண்ட் வாஷ், சோப் போன்றவற்றை வைத்திருக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அரசு அலுவலகங்களில் கைகளை கழுவும் வசதி செய்யப்பட்டு வருகிறது.கொக்கு பார்க் அருகில் அமைந்துள்ள கலால் துறை அலுவலக வளாகத்தில், எடை அளவை கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகம் இயங்கி வருகிறது. மேலும், இங்கு பரிசோதனைக் கூடம், கலால் துறையின் பறக்கும் படையினர் பிரிவு போன்றவையும் செயல்படுகிறது.இந்த அலுவலகத்திற்குள் செல்வதற்கு மூன்று வாசல்கள் உள்ளன. மூன்று வாசல்களிலும் நாற்காலிகள் போடப்பட்டு கைகளை கழுவுவதற்கு வசதியாக பெரிய கேன்களில் தண்ணீர் மற்றும் ேஹண்ட் வாஷ் வைக்கப்பட்டுள்ளது.'கைகளை கழுவிய பின் அலுவலகத்திற்குள் வரவும்' என்ற வாசகத்துடன் அறிவிப்பும் அலுவலக வாசல்களில் ஒட்டப்பட்டுள்ளது. பிரதான வாசலில் ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களையும், ஊழியர்களையும் கைகளை கழுவிவிட்டு வருமாறு அந்த ஊழியர் நினைவூட்டுகிறார்.கலால் அலுவலகத்திற்குள்ளும் மேஜைகளில் கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி(ேஹண்ட் சானிடைசர்) வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள கலால் சோதனைச் சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் கலால் போலீசாருக்கு ேஹண்ட் சானிடைசர் வழங்குவதற்கும் கலால் துணை ஆணையர் தயாளன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X