கொரோனா இந்தியா பாக்ஸ்

Added : மார் 21, 2020
Share
Advertisement

சலுான்களை மூட உத்தரவு
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கூடங்கள், காபி ஷாப்கள், முடி திருத்த நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களை, இம்மாதம், 31 வரை மூட, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, உடனடியாக அமலுக்கு வந்தது.
இந்தியர்களுக்கு தங்கும் வசதி
ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் உள்ள பயணியர், இந்தியா வர, இம்மாதம் 31 வரை, மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, இந்திய மாணவர்கள் உட்பட, ஏராளமானோர், நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

. அவ்வாறு சிக்கி தவிப்பவர்களுக்கு, தங்கும் வசதி உட்பட, பல்வேறு உதவிகளையும், இந்திய துாதரகம் செய்து வருகிறது. பிரிட்டனில் சிக்கியுள்ள இந்தியர்கள், தங்கள் இருப்பிடம் உள்ளிட்ட விபரங்களை, info.london@mea.gov.in என்ற இ-மெயில் முகவரியில் தெரிவிக்குமாறு, அறிவுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற கட்டுப்பாடு நீட்டிப்பு
டில்லி உயர் நீதிமன்றத்தில், இம்மாதம், 31 வரை, முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என, அறிவிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாட்டை, அடுத்த மாதம், 3ம் தேதி வரை நீட்டித்து, நீதிமன்ற நிர்வாக கமிட்டி, நேற்று உத்தரவிட்டது.மேலும், 'ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து, பயணியர் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து, மத்திய அரசு மற்றும் விமானப் போக்குவரத்து துறை இயக்குனரகம் பதில் அளிக்க வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றம், நேற்று உத்தரவிட்டது.

வீட்டு தனிமையில் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, ராஜ்யசபா எம்.பி., சுக்கேந்து சேகர் ராய், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக, ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு, கடிதம் மூலம், தகவல் தெரிவித்தார்.'பாலிவுட்' திரைப்பட பின்னணி பாடகி, கனிகா கபூருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், சமீபத்தில் நடத்திய விருந்து நிகழ்ச்சியில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகனும், பா.ஜ., - எம்.பி.,யுமான துஷ்யந்த் சிங், கலந்து கொண்டார்.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அவருக்கு நேர் பின்னால், திரிணமுல் காங்., - எம்.பி., டிரெக் ஓ பிரெய்ன் அமர்ந்திருந்தார். இதனால், அவரும், தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், பார்லி., கூட்டத் தொடரிலும், துஷ்யந்த் கலந்து கொண்டது, பல எம்.பி.,க்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த இரு, எம்.எல்.ஏ.,க்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக, நேற்று அறிவித்தனர்.

துபாயில் இருந்து சமீபத்தில் திரும்பிய நபர் ஒருவர், திருமண நிகழ்ச்சியில், இரு எம்.எல்.ஏ.,க்களுடன் நெருங்கி நின்று, 'செல்பி' எடுத்துக் கொண்டார். அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, எம்.எல்.ஏ.,க்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்வதாக அறிவித்து உள்ளனர்.எம்.பி.,க்களுக்கு வேண்டுகோள்பார்லிமென்டின் இரு சபைகளிலும், எம்.பி.,க் களாக பதவி வகிக்கும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த, 38 டாக்டர்களை, தங்கள் தொகுதிகளில், கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபடுமாறு, பார்லி., விவகாரத்துறை அமைச்சர், பிரஹலாத் ஜோஷி, நேற்று கேட்டுக் கொண்டார்.

ஷில்லாங்கில் ஊரடங்கு
வட கிழக்கு மாநிலமான மேகாலயாவில், கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. ஆனாலும், அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கோவில், தேவாயலங்கள், மசூதிகளில் வழிபாடு நடத்த, இம்மாதம் 31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தலைநகர் ஷில்லாங்கில், இன்று, 24 மணி நேரம், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநவமி துவக்க விழா ரத்துகடவுள் ராமர் பிறந்த தினமான, ராமநவமி விழா, அடுத்த மாதம், 2ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ராமர் பிறந்த ஊரான அயோத்தியில், இம்மாதம், 24ல் துவங்கி, 10 நாட்கள், சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த துவக்க விழா, ரத்து செய்யப்படுவதாக, நேற்று அறிவிக்கப்பட்டது.

தனிமை முகாமில் 114 பேர்மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில் இருந்து, மஹாராஷ்டிராவின் புனேவுக்கு, 115 பயணியர் நேற்று வந்தனர். 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தில் வந்த அவர்களில், ஒரு பயணிக்கு மட்டும் லேசான இருமல் இருந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்ற, 114 பயணியருக்கும், கொரோனா அறிகுறி இல்லாத போதும், அவர்களும் தனிமை முகாம்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டனர்.'குடி' மகன்களின் ஒழுங்குகொரோனா பரவலை குறைப்பதற்காக, மக்கள் ஒருவருக்கொருவர், இடைவெளி விட்டு, பொறுப்புடன் செயல்படுமாறு, கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதையடுத்து, வட கேரளாவின் கண்ணுார் மாவட்டத்தின் மதுபானக் கடை ஒன்றில், மது வாங்க வரிசையில் நிற்கும் குடிமகன்கள், 1 மீட்டர் இடைவெளி விட்டு ஒழுங்குடன் நின்று மது வாங்கி சென்ற, 'வீடியோ' சமூக வலைதளங்களில், வேகமாக பரவி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X