இந்தியா

வரி வசூல் சிறப்பு முகாம் ரத்து உழவர்கரை நகராட்சி அறிவிப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உழவர்கரை நகராட்சி மூலம் இன்றும், நாளையும் நடைபெற இருந்த வீட்டு வரி மற்றும் சொத்து வரி வசூல் சிறப்பு முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து நகராட்சி ஆணையர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு;உழவர்கரை நகராட்சி வீட்டு வரி மற்றும் சொத்துவரி செலுத்துவோரின் நலன் கருதி இன்று 21ம் தேதி கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப் பள்ளியிலும், நாளை 22ம் தேதி முத்தரையர்பாளையம் முத்தரையர் மேல்நிலைப் பள்ளியிலும் வீட்டு வரி வசூல் சிறப்பு முகாம் நடத்த உத்தேசிக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டு வரி மற்றும் சொத்துவரி வசூல் சிறப்பு முகாம்கள் ரத்து செய்யப்படுகிறது.எனவே கருவடிக்குப்பம் பாரதி நகர், மகாவீர் நகர், சாமிபிள்ளைத்தோட்டம், ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், எழில் நகர், வசந்த் நகர், செந்தாமரை நகர், சங்கரதாஸ் சுவாமிகள் நகர் ஆகிய வார்டுகளை சேர்ந்தவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடி வீட்டு வரி வசூல் மையத்தில், வீட்டு வரியை செலுத்தலாம்.முத்தரையர்பாளையம், தர்மாபுரி, தனபால் நகர், கல்வி நகர், மேரி உழவர்கரை வார்டுகளை சேர்ந்தவர்கள் மேரி உழவர்கரை நகராட்சி அலுவலகத்தில் உள்ள வீட்டு வரி வசூல் மையத்தில் வீட்டு வரியை செலுத்தலாம்.மேலும் இம்மாதம் முழுவதும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் ஜவகர் நகர் நராட்சி தலைமை அலுவலகம், மேரி உழவர்கரை நகராட்சி அலுவலகம், இ.சி.ஆரில் உள்ள நவீன சுகாதார மீன் அங்காடி மற்றும் வி.வி.பி., நகர் வீட்டு வரி வசூல் மையங்கள் காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி மற்றும் மதியம் 2:00 மணி முதல் மாலை 4.30 மணிவரை இயங்கும்.மேலும் வீட்டு வரி செலுத்துவோர் ஆன்லைன் மூலம் Igrams.py.gov.in என்ற முகவரியிலும் மற்றும் டெபிட் கார்டு மூலமாகவும் வீட்டு வரி மற்றும் சொத்து வரியை செலுத்தலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X