பொது செய்தி

தமிழ்நாடு

பேரூராட்சி அலுவலகங்களில் கை கழுவும் இடம் அமைப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement
 பேரூராட்சி அலுவலகங்களில்  கை கழுவும் இடம் அமைப்பு

பெ.நா.பாளையம்:தமிழகம் முழுவதும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில், வீதி, வீதியாக கிருமிநாசினிகள் தெளிக்கும் பணி நடந்து வருகிறது. வைரஸ் வராமலிருக்க எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, துண்டு பிரசுரங்கள் மூலமாக பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதில், பொதுமக்கள் தினசரி, 5 முதல், 10 தடவை வரை, தங்களுடைய கைகளை சோப்பால் கழுவி, சுத்தம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு உள்ளாட்சி அலுவலகங்களின் வளாகங்களிலும், கை கழுவும் இடம் அமைக்கப்பட வேண்டுமென, கோவை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் நரசிம்மநாயக்கன்பாளையம், கூடலுார், வீரபாண்டி ஆகிய பேரூராட்சி அலுவலக வளாகங்களில், கை கழுவும் இடங்கள் அமைக்கப்பட்டன.பொதுமக்கள், ஊழியர்கள் அலுவலக வளாகத்திற்குள், கைகளை சுத்தமாக கழுவிய பின் நுழையுமாறு, அறிவுறுத்தப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 'வாஷ்பேஷன்' போல, தற்காலிக கைகழுவும் இடங்களை அமைத்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X