இந்தியா

மணக்குள வினாயகர் கல்லூரிக்கு விருது

Added : மார் 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: மணக்குள வினாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரிக்கு தமிழ்நாடு ஐ.சி.டி., அகடாமியின் தலைசிறந்த கல்வி நிறுவன விருது வழங்கப்பட்டது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஐ.சி.டி., அகாடமியுடன் இணைந்து கடந்தாண்டில் ஆசிரியர்கள், மாணவர்கள் திறன் மேம்பாட்டிற்காக அதிக எண்ணிக்கையிலான நிகழ்வுகள், திட்டங்கள் சிறந்த முறையில் நடத்தியமைக்காக இந்த விருது மணக்குள வினாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரிக்கு வழங்கப்பட்டது.சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., ரிசர்ச் பார்க்கில் நடந்த ஐ.சி.டி., பிரிட்ஜ் விழாவில், ஐ.சி.டி., அகடாமியின் தலைவர் லட்சுமி நாராயணன், தலைமை நிர்வாக அதிகாரி சிவக்குமார், தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோர் விருதினை வழங்கினர். மணக்குள விநாயகர் கல்வி குழும மேலாண் இயக்குனர் தனசேகரன், கல்லுாரி முதல்வர்மலர்கண் ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர். விழாவில் மயிலம் பொறியியல் கல்லுாரி முதல்வர் செந்தில், எம்.ஐ.டி., கல்லுாரி வேலைவாய்ப்பு அதிகாரி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X