பொது செய்தி

இந்தியா

கொரோனா பிட்ஸ்

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை/தேசியம்/விஜய்தேவ்/3579/5:11//மலேஷியாவில் ராணுவ உதவிமலேஷியாவில், அனைத்து பள்ளிகளும், பெரும்பாலான வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. 'வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. அதை மதிக்காமல் பலர், வீதிகளில் சுற்றி வருகின்றனர். அவர்களை பிடிக்க, போலீசாருடன், ராணுவத்தினரை ஈடுபடுத்த, மலேஷிய அரசு முடிவு செய்துள்ளது.சொகுசு கப்பல்களுக்கு தடைஇத்தாலி அரசு, வெளிநாட்டு சுற்றுலா பயண கப்பல்கள், தங்கள் துறைமுகங்களில் நுழைய, ஏப்., 3 வரை தடை விதித்துள்ளது. அதேசமயம், கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, உள்நாட்டு கப்பல்கள், துறைமுகத்திற்கு வர அனுமதி அளித்துள்ளது.

'கப்பல்களில் உள்ளோர், தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு பிறகே, வீடு திரும்ப அனுமதிக்கப்படுவர்' என, அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இத்தாலி பிரதமர், கியுசெப்பி கன்டி, ''கடைகளை மூடவும், பொது இடங்களில் மக்கள் கூடவும் விதிக்கப்பட்டுள்ள தடை, அடுத்த மாதத்திற்கும் நீட்டிக்கப்படும்,'' என, தெரிவித்துள்ளார். நடிகர் டேனியர் டே கிம் பாதிப்புஅமெரிக்காவில், 'டிவி' நடிகர் டேனியர் டே கிம், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஹவாய் தீவில் இருந்து, நியூயார்க் திரும்பிய போது, தொண்டையில் கரகரப்பாக இருந்ததை உணர்ந்த இவர், வீட்டிலேயே தங்கி பரிசோதனை மேற்கொண்டார். அதில், கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த செய்தியை அவர், 'இன்ஸ்டாகிராம்' வலைதளத்தில் பகிர்ந்து, எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு, தன் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.இலங்கையில் 3 நாள் ஊரடங்குஇலங்கை அரசு, நேற்று மாலை, 6:00 மணி முதல், 23ம் தேதி காலை, 6:00 மணி வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இலங்கையில், 27 வெளிநாட்டினர் உட்பட, 2,400 பேர், தனியிடத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இலங்கையில், 66 பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 22 பேர், இத்தாலியில் இருந்து வந்தவர்கள். பிரிட்டனில் இருந்து வந்த, இருவர் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த ஒருவருக்கு, வைரஸ் பாதிப்பு உள்ளது.தலைவர்கள் புத்தாண்டு செய்திஈரான் மத தலைவர், அயதுல்லா அலி காமேனியும், அதிபர், ஹசன் ரஹானியும், 'நவ்ருஸ்' புத்தாண்டு செய்தி வெளியிட்டுள்ளனர். அதன் விபரம்:அழையா விருந்தாளியாக வந்து, உயிர்பலி உண்டாக்கிய கொரோனாவை வீழ்த்தி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த உறுதியேற்போம். 8 கோடி மக்களும் கடுமையாக உழைத்து, புத்தாண்டில், உற்பத்தியை பல மடங்கு உயர்த்தி, ஏற்றுமதியை அதிகரிக்க, சபதம் செய்வோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

பாக்.,கிற்கு உலக வங்கி உதவிபாகிஸ்தானுக்கு, உலக வங்கியும், ஆசிய மேம்பாட்டு வங்கியும், முறையே, 1,728 கோடி மற்றும் 2,500 கோடி ரூபாய், நிதியுதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கை, சமூக பொருளாதார தாக்கத்தை சமாளிக்க, இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.ஆஸி.,யில் பலி 7 ஆக உயர்வுஆஸ்திரேலியாவின், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில், கொரோனா பாதித்த, 81 வயது மூதாட்டி, சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதன் மூலம், உயிரிழப்பு, 7 ஆக அதிகரித்து உள்ளது. இதற்கிடையே, ஆஸ்திரேலிய பிரதமர், ஸ்காட் மாரிசன், எல்லைகளை மூட உத்தரவிட்டுள்ளார். குடிமக்கள் தவிர்த்து, அனைத்து வெளிநாட்டவர்களும், நாட்டிற்குள் நுழையவும், வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X