'சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை'

Added : மார் 21, 2020
Share
Advertisement

பீஜிங் : சீனாவில், இரண்டாவது நாளாக நேற்று, புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அண்டை நாடான சீனாவில், கடந்தாண்டு டிசம்பரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ், நாடு முழுவதும் வேகமாக பரவியது. அந்நாட்டின், வூஹான் நகரில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. சீனாவிலிருந்து, இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கும், இந்த வைரஸ் பரவியது. சீனாவில் மட்டும், இதுவரை, 3,248 பேர், கொரோனா தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். மேலும் பலர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்தது.

இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, வேகமாக குறைந்து வந்தது. நேற்று முன்தினம், புதிதாக யாருக்குமே கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இரண்டாவது நாளாக, நேற்றும் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. சீன அரசு அதிகாரிகள், டாக்டர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் கடுமையான உழைப்பின் மூலம், இந்த சாதனையை எட்டியுள்ளோம். அதேநேரத்தில், வெளிநாடுகளில் இருந்து சீனாவுக்கு வந்தவர்களுக்கு நடந்த பரிசோதனையில், புதிதாக, 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும், 80 ஆயிரத்து, 967 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்களில், 3,248 பேர் இறந்து விட்டனர். 71 ஆயிரத்து, 150 பேர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 6,569 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.


ஒத்துழைக்க தயார்:


ஜின்பிங்சீன அதிபர், ஜின்பிங், ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடினுடன், நேற்று தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக, ரஷ்யாவுடனும், மற்ற உலக நாடுகளுடனும் இணைந்து செயல்பட சீனா தயாராக உள்ளது. சர்வதேச மக்களின் சுகாதாரம் கருதி, எவ்விதமான நடவடிக்கைக்கும், சீனா தயாராக உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

அதில், பெரும் பகுதியை சாதித்து விட்டோம். இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையே, வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவது குறித்து, சீன அரசு சார்பில், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் அதிகாரிகளுக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக நேற்று ஆலோசனையும் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X