இந்தியா

குடும்பத்திற்கு 10 இலவச முக கவசம் வையாபுரிமணிகண்டன் வலியுறுத்தல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 முக கவசம் கொண்ட பாக்கெட்டுகளை அரசு இலவசமாக வழங்க வேண்டும் என அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்பு, ஒரு முக கவசம் புதுச்சேரியில் ரூ.3 என்ற விலையில் விற்கப்பட்டது. தற்போது உற்பத்தி நிறுவனங்களே ரூ.16 முதல் ரூ.18 வரை விலை நிர்ணயம் செய்கின்றன. 100 முக கவசம் அடங்கிய பண்டலின் மேல் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டு மருந்து கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதில் ஒரு முக கவசத்தை ரூ.20 வரை விற்கின்றனர்.இந்நிலையில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு, நகராட்சி, காவல்துறை, எடை அளவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் மருந்து கடைகளில் சோதனை நடத்துகின்றனர். இதனால் தாங்கள் வாங்கிய முக கவசத்தை ஒட்டுமொத்தமாக உற்பத்தியாளர்களிடம் திருப்பி அளித்துள்ளனர். மேலும் முக கவசம் விற்பதில்லை என்றும் முடிவெடுத்துள்ளனர். முக கவசம் கிடைக்காமல் மக்கள் மிகுந்த பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.கொரோனா பாதிப்பு பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 முக கவசம் கொண்ட பாக்கெட்டுகளை மாநில அரசு இலவசமாக உடனே வழங்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X