பொது செய்தி

தமிழ்நாடு

உச்சி வெயிலிலும் உற்சாகம்

Added : மார் 21, 2020
Share
Advertisement
 உச்சி வெயிலிலும் உற்சாகம்

அன்னுார்:பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், அன்னுார் பகுதி மாணவர்கள், உற்சாகமாக உச்சி வெயிலில் கிரிக்கெட் விளையாடுகின்றனர்.உச்சி வெயில் கொளுத்துகிறது. அருகில் மரங்கள் இல்லை; நிழல் இல்லை. ஆனாலும் அனல் பறக்கும் வெயிலைப் பொருட்படுத்தாமல், அன்னுார் பகுதியில் பல கிராமங்களில் மாணவர்கள் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடுகின்றனர்.'கொரோனா' வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க, 10, 11, 12 ம் வகுப்பு மாணவர்களை தவிர, மற்ற வகுப்பு மாணவர்களுக்கு, வருகிற 31-ஆம் தேதி வரை, விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், குஷியான மாணவர்கள் தங்கள் பகுதி தரிசு நிலங்களில் மரவள்ளிக் குச்சி உள்பட கிடைக்கும் குச்சிகளை, 'ஸ்டம்ப்பு'களாக பயன்படுத்தி காரக்பால், ரப்பர் பால் வைத்து, உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல், கிரிக்கெட் விளையாடுகின்றனர்.நகரங்களில், மொபைல், 'டிவி' மற்றும் 'லேப் டாப்' களில் மூழ்கிக்கிடக்கும் சிறுவர், இளைஞர்களுக்கு நடுவில், அன்னுார் பகுதி கிராமங்களில், உற்சாகமாக ஓடியாடி விளையாடுகின்றனர். தாசபாளையம், சாணாம்பாளையம், செல்லனுார், கரியாக்கவுண்டனுார் என, பல ஊர்களிலும, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X