சபரி செவிலியர் கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம்| Dinamalar

இந்தியா

சபரி செவிலியர் கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம்

Added : மார் 21, 2020
Share

புதுச்சேரி: கிருமாம்பாக்கத்தில் உள்ள சபரி செவிலியர் கல்லுாரியில், பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் ழெனஸ்தாமேரி வரவேற்றார். பணியிட மகளிருக்கான பாலியல் வன்முறை தடுப்புக்குழு மாவட்ட தலைவர் வித்யாராம்குமார் மற்றும் அக்குழுவை சேர்ந்த இயக்குனர் மோகன், வழக்கறிஞர்கள் லலிதாம்பாள், மரியஅன்ன தயாவதி ஆகியோர் கல்லுாரி மாணவிகளுக்கு பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மாணவிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் கையெழுத்து சமூக விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது. துணை முதல்வர் உமா நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X