பொது செய்தி

தமிழ்நாடு

அரசு நடுநிலைப் பள்ளிக்கு ஐந்து கணினி வழங்கல்

Added : மார் 21, 2020
Share
Advertisement
 அரசு நடுநிலைப் பள்ளிக்கு  ஐந்து கணினி வழங்கல்

அன்னுார்:எல்லப்பாளையம், அரசு நடுநிலைப் பள்ளிக்கு, நன்கொடையாளர்கள், ஐந்து கம்ப்யூட்டர்கள் வழங்கினர்.இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 200 மாணவ மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில், கணினி வழியில் கற்பித்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 'ஸ்மார்ட் கிளாஸ்' அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு, தேவையான கம்ப்யூட்டர்கள், குறைவாக இருப்பதால் நன்கொடையாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, ஐந்து பேர், தலா ஒரு கம்ப்யூட்டர் வீதம், ஐந்து கம்ப்யூட்டர்களை, நேற்று முன்தினம் பள்ளியில் நடந்த விழாவில் வழங்கினர். விழாவுக்கு, ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால் தலைமை வகித்தார்.
நன்கொடையாளர்கள் சுரேஷ், நாராயணசாமி, பாபு, அசோக், கவுதம் ஆகியோர், தலா ஒரு கம்ப்யூட்டரை பள்ளிக்கு வழங்கினர்.தமிழக ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாநிலத் தலைவர் காளிச்சாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X