இந்தியா

பாழடைந்த ஊழியர் குடியிருப்பு சபாநாயகர் சிவக்கொழுந்து ஆய்வு

Added : மார் 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் பாழடைந்துள்ள ஊழியர் குடியிருப்பு பகுதியில் அரசின் புதிய திட்டப்பணிகள் மேற்கொள்வது குறித்து, சபாநாயகர் சிவக்கொழுந்து ஆய்வு நடத்தினார்.லாஸ்பேட்டை பிப்மேட் சாலையில் வள்ளலார் பள்ளி, புறக்காவல் நிலையம் எதிரே அரசு பாலிடெக்னிக்கிக்கு சொந்தமான 11 ஊழியர் குடியிருப்புகள் கடந்த 15 ஆண்டுகளாக யாரும் வசிக்காமல், இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.அதன்பேரில், தொகுதி எம்.எல்.ஏ.,வும், சபாநாயகருமான சிவக்கொழுந்து, கல்விதுறை அமைச்சர் கமலக்கண்ணன் மூலமாக பல ஆய்வு கூட்டங்கள் நடத்தியும், நேரில் ஆய்வு செய்தும், பாழடைந்த கட்டடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டது.அந்த இடத்தில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் பொதுப்பணித் துறை மூலம் போர்வெல் அமைப்பது, வாடகை கட்டடத்தில் இயங்கும் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கட்டுவது, கலை பண்பாட்டுத்துறை மூலம் நுாலகம் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது.அதன்பேரில், சபாநாயகர் சிவக்கொழுந்து அப்பகுதியில், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு, துணை இயக்குநர் ஜெயகுமார், வருவாய் அதிகாரி ஷீலா, நில அளவையாளர் சந்துரு மற்றும் பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர்கள் முருகானந்தம், பாக்கியசாலி, இளநிலை பொறியாளர் ராஜேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X