இந்தியா

அடையாளம் தெரியாத ஆண் உடல் போலீசார் விசாரணை

Added : மார் 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: கோரிமேடு ்அருகே இறந்து கிடந்த 55 வயது நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோரிமேடு காமராஜர் சாலையில் பாண்லே பூத் அருகே நடைபாதையில் கடந்த 16ம் தேதி இரவு 11.00 மணியளவில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இது குறித்து குமாரவேல் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் டி.நகர் போலீசார் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமன சவக்கிடங்கில் வைத்துள்ளனர். இறந்து கிடந்தவர் 165 செ.மீ., உயரமும், ஒல்லியான தேகம், நீலம் மற்றும் வெளிர் ரோஸ் கலந்த கட்டம் போட்ட முழு கை சட்டையும், சாம்பல் நிற கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தார். வலது கால் முட்டியில் பழைய காய வடுவும், மார்பக நடு பகுதியில் ஒரு மச்சமும் உள்ளது.இறந்தவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 0413-2272121 என்ற தொலைபேசி எண்ணில் டி.நகர் போலீஸ் ஸ்டேஷனை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X