அரசு பள்ளியில் சுவர் ஓவிய முகாம்| Dinamalar

இந்தியா

அரசு பள்ளியில் சுவர் ஓவிய முகாம்

Added : மார் 21, 2020
Share

புதுச்சேரி: முத்தியால்பேட்டையில் உள்ள காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் 'சுவர் ஓவிய முகாம்' பரிசளிப்பு விழா நடந்தது.முத்தியால்பேட்டையில் உள்ள காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் புதுச்சேரி எல்லோரா நுண்கலை மற்றும் பண்பாட்டு அமைப்பு சார்பில் 'சுவர் ஓவிய முகாம்' முகாம் நடந்தது. முகாமில் பல்வேறு ஓவியர்கள் கலந்துகொண்டு பல வண்ண சுவர் ஓவியங்களை வரைந்தனர்.தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் மரியாபவுலின் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் நாராயணன், நுண்கலை ஆசிரியர் லிங்கேசர் முன்னிலை வகித்தனர்.எல்லோரா நுண்கலை மற்றும் பண்பாட்டு அமைப்பின் தலைவர் முனிசாமி, செயலர் ராஜாக்கண்ணன் ஆகியோர் ஓவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.நிகழ்ச்சியில் ஓவியர்களான அமைப்பின் நிர்வாகிகள், துணைத்தலைவர் மகேஷ், பொருளாளர் சுப்புராயன், இணை செயலர் லிங்கேசர், சிவக்குமார், தங்கவேல், தென்னரசு, வினாயகம் மற்றும் ஓவியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X