பொது செய்தி

தமிழ்நாடு

வழிபாட்டு தலங்களில் கிருமிநாசினி தெளிப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

பெ.நா.பாளையம்:உலகில் பல்வேறு நாடுகளில் 'கொரோனா' வைரஸ் பரவி, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க, தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.நேற்று முதல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரும் சுற்றுலா பஸ்கள், தமிழக எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன. கோவை வடக்கு தமிழக, கேரள எல்லையான ஆனைகட்டியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது. நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், கூடலுார், வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் துாய்மை காவலர்களை கொண்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி, காலை முதல் மாலை வரை நடந்து வருகிறது. நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில், சித்தி விநாயகர் கோவிலில் நேற்று காலை, கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது. இதேபோல இங்குள்ள மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.கோவையிலிருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக செல்லும் பஸ்களிலும், அதேபோல, மேட்டுப்பாளையத்தில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக கோவை செல்லும் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது. குறிப்பாக, பஸ்ஸின் கைப்பிடி, சக்கரம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினியை சுகாதாரப் பணியாளர்கள் தெளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X