இந்தியா

இணையத்தில் பணம் கட்டுங்க மின் துறை வேண்டுகோள்

Added : மார் 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: மொபைல்போன் மற்றும் இணைய தளம் வழியாக மின்கட்டணம் செலுத்த மின் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து மின்துறை கண்காணிப்பு பொறியாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக,பொதுமக்களின் நலன் கருதி,மின் நுகர்வோர்கள் தங்களுடைய மின் கட்டணத்தை தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே மொபைல்போன் அல்லது கணினி மூலமாக இணையதள வசதிகளை பயன்படுத்தி மின்துறையின் pedservices.py.gov.in என்ற இணையதள முகவரி மூலம் செலுத்த வேண்டும்.மேலும் இணையதள சேவைகளை பயன்படுத்த முடியாத மின் நுகர்வோர்கள் தங்களுடைய மின் கட்டண ரசீதில் குறிப்பிட்டுள்ள கடைசி தேதிவரை காத்திராமல் முன் கூட்டியே மின் கட்டண வசூல் மையங்களுக்கு வந்து மின் கட்டணத்தை செலுத்தி மின் கட்டண வசூல் மையங்களில் கடைசி தேதியில் ஏற்படக்கூடும் கூட்ட நெரிசல்களை தவிர்க்கவும். மின் நுகர்வோரின் பாதுகாப்பே மின்துறையின் தற்போதைய தலையாய கடமை.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X