இந்தியா

பைக் மோதியதில் செக்யூரிட்டி படுகாயம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

பாகூர்: அடையாளம் தெரியாத பைக் மோதிய விபத்தில், தனியார் மருத்துவமனை செக்யூரிட்டி படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.பாகூர் அடுத்த இருளஞ்சந்தை மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் லட்சுமணன்,62; கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 18ம் தேதி அதிகாலை பணியில் இருந்த போது, மருத்துவமனைக்குள் நுழைய முயன்ற பசுமாட்டினை வெளியே விரட்டி சென்றார். அப்போது, கடலுாரில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத பைக், லட்சுமணன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.அதில், படுகாயமடைந்த லட்சுமணனை அருகில் இருந்த ஊழியர்கள் மீட்டு, அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். இடுப்பு, தலை உள்ளிட்ட இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.புகாரின் பேரின், கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய நபரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X