எலி பேஸ்ட் சாப்பிட்ட தொழிலாளி பலி| Dinamalar

இந்தியா

எலி பேஸ்ட் சாப்பிட்ட தொழிலாளி பலி

Added : மார் 21, 2020
Share

புதுச்சேரி: சரிவர வேலை கிடைக்காத கூலித் தொழிலாளி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தட்டாஞ்சாவடி, ஞானதியாகு நகர் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன்,48; கூலித் தொழிலாளி. இவரது மனைவி அஞ்சுகம்,45; இவர்களுக்கு சூர்யா,22; அரவிந்தன் 22 என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.குடிபழக்கத்திற்கு அடிமையான கன்னியப்பனுக்கு சரிவர வேலை கிடைக்கவில்லை. இதனால் மன அழுத்தத்தில் இருந்த அவர் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கன்னியப்பன் நேற்று மாலை இறந்தார்.இதுகுறித்து டிநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X