பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட கடன் திட்ட அறிக்கை வெளியீடு: ரூ.12,522 கோடி வழங்க இலக்கு

Added : மார் 21, 2020
Share
Advertisement

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், 2020-21ம் ஆண்டுக்கான, 12 ஆயிரத்து, 522 கோடி ரூபாய் மதிப்பிலான, கடன் திட்ட அறிக்கையை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.மாவட்டம் தோறும், விவசாயம், கல்விக்கடன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கான, மானிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்தில், 30 சதவீதம் வரை, மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. வேளாண்மை, தொழில்துறை, கல்வி மற்றும் முன்னுரிமை பெற்ற திட்டங்கள் அடிப்படையில், கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.மாவட்டம் தோறும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், நிதியாண்டுக்கான கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.வரும், 2020-21ம் ஆண்டுக்கான, கடன் திட்ட அறிக்கையை, திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கியான, கனரா வங்கி தயாரித்துள்ளது.விவசாயம் சார்ந்த திட்டங்கள் அடிப்படையில், 3,349 கோடி ரூபாய்; சிறு குறு தொழில்துறைக்கு, 7,436 கோடி ரூபாய்; இதர முன்னுரிமை கடன்களுக்கு, 1738 கோடி என, 12 ஆயிரத்து, 522 கோடி ரூபாய் மதிப்பிலான, கடன் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் விஜய கார்த்திகேயன், கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.
டி.ஆர்.ஓ., சுகுமார், கனரா வங்கியின் திருப்பூர் மண்டல பொது மேலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி, 'நபார்டு' வங்கி பொது மேலாளர் ராஜூ, மகளிர் திட்ட இயக்குனர் கோமகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கலெக்டர் கூறுகையில்,''திருப்பூர் மாவட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், 105 சதவீதம் அளவுக்கு, இலக்கை தாண்டி அதிக அளவில் கடன் வழங்கப்படுகிறது.கடந்த ஆண்டு, 12 ஆயிரத்து, 036 கோடி ரூபாய் கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தாண்டு, 12 ஆயிரத்து, 522 கோடி ரூபாய் கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X