சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விரிவுபடுத்தும் பணிக்காக ஸ்டேன்மோர் பாலம் இடிப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

வால்பாறை:வால்பாறையில், ஸ்டேன்மோர் ரோடு விரிவுபடுத்த பாலம் இடிக்கப்படுகிறது.வால்பாறை நகரிலிருந்து சோலையாறு அணை செல்லும் வழியில் உள்ளது ஸ்டேன்மோர். நகரிலிருந்து, ஐந்து கி.மீ., தொலைவில் உள்ள இந்த ரோட்டில், பழமையான பாலம் அமைந்துள்ளது.இந்த பாலத்தின் வழியாக தான், சோலையாறு அணை, வில்லோனி, குரங்குமுடி, இஞ்சிப்பாறை, மானாம்பள்ளி பவர் ஹவுஸ், கேரள மாநிலம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ் மற்றும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.மிகவும் குறுகலான இந்தப்பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ரோட்டை விரிவு படுத்தி, புதிய பாலம் கட்டும் பணிக்காக ஸ்டேன்மோர் பாலம் இடிக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.வால்பாறை நகரிலிருந்து ஸ்டேன்மோர் வழியாக இயக்கப்படும் அனைத்து வாகனங்களும், ரொட்டிக்கடை, பாறைமேடு, பழைய வால்பாறை வழியாக இயக்க வேண்டும் என்றும் நெடுஞ்சாலைத்துறையினர் அறிவித்துள்ளனர்.மாற்று வழிப்பாதையில் அரசு பஸ்கள் இயக்குவதாலும், பயண நேரம் அதிகரித்துள்ளதாலும் மக்கள் சிரமப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X