இந்தியா

மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு பால் சங்கம் அறிவிப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்து, பால் விற்பனை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து புதுச்சேரி தலைமை தனியார் பால் உற்பத்தியாளர்கள்மற்றும் விற்பனையாளர்கள் நலச் சங்க தலைவர் கிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, நாளை மக்கள் ஊரடங்கு நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அன்றைய தினம் காலை 7:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை, வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, மக்கள் ஊரடங்கில் பங்கேற்று நாளை புதுச்சேரி தலைமை தனியார் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நலச் சங்கம் சார்பில் பால் விற்பனை நிறுத்தப்படும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X