இந்தியா

மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு பள்ளி மீது போலீசில் புகார்

Added : மார் 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: அரசு உத்தரவை மீறி, சிறப்பு வகுப்பு நடத்திய தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருவாய் துறையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு வரும் 31ம் தேதிவரை விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மீறும் கல்வி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் அரசின் உத்தரவை மீறி, அரியாங்குப்பம் ஸ்ரீராம் நகரில் உள்ள டிவைன் உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதாக வருவாய் துறையினருக்கு புகார் சென்றது.அதன்பேரில் தாசில்தார் ராஜேஷ் கண்ணா, துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் கருணாநிதி, கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய வருவாய் துறை செயலாக்க பிரிவினர் நேற்று மதியம் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, பள்ளியில் முதல் மாடியில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 19 பேருக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்று கொண்டிருந்தது.அதனைத் தொடர்ந்து மாணவர்களை வெளியேற்றிய அதிகாரிகள், பள்ளியை மூட பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். மேலும், அரசின் உத்தரவை மீறி சிறப்பு வகுப்பு நடத்திய டிவைன் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தாசில்தார் ராஜேஷ் கண்ணா, அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்துள்ளார்.இந்த சம்பவம் பள்ளிக் கல்வி துறை மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X