இந்தியா

மாகி, ஏனாமில் 144 தடை உத்தரவு அமல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு மாகி மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாகி மற்றும் ஏனாமில் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.அந்த உத்திரவில் சுகாதார துறை அறிவுறுத்தலின்படி கோவில், மசூதி, தேவாலயம், திருமண மண்டபம், மதுபார் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட வேண்டாம் என அறிவுறுத்திபட்டுள்ளனர். இப்படி கூடுவதால் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதுடன், உயிரிழப்பு அபாயமும் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.எனவே மாகி மற்றும் ஏனாமில் 4 நபர்களுக்கு மேல் ஒன்றாக கூடுவது 144 சட்ட பிரிவின்படி தடை செய்யப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை உத்தரவை பின்பற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X