இந்தியா

கைகளை சுத்தமாக கழுவிய முதல்வர் சட்டசபையில் 'கொரோனா' விழிப்புணர்வு

Added : மார் 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்ற முதல்வர் நாராயணசாமி, வாசலில் கைகளை கழுவி, கொரோனா தொற்றை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்க சுகாதாரமான பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும், அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்காக, அரசு அலுவலகங்களில் தண்ணீர், சோப், ேஹண்ட் வாஷ் போன்றவற்றை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதன்படி, தினசரி நுாற்றுக்கணக்கான மக்கள் வருகின்ற சட்டசபை வளாகத்தின் நுழைவு வாயிலில் இரண்டு பக்கெட்டுகளில் தண்ணீரும், சோப், ேஹண்ட் சானிடைசர் போன்றவையும் நேற்று வைக்கப்பட்டு இருந்தது.சட்டசபை செயலர் வின்சன்ட் ராயர் மற்றும் ஊழியர்கள், வாட்ச் அண்ட் வார்டு பாதுகாவலர்கள் உள்ளிட்ட அனைவரும் கைகளை கழுவி விட்டு பணியாற்றுவதற்காக சட்டசபை வளாகத்திற்குள் சென்றனர்.மதியம் 12:00 மணியளவில் சட்டசபைக்கு வந்த முதல்வர் நாராயணசாமி தனது காரை விட்டு இறங்கி, சட்டசபை வாயிலுக்கு வந்தார். சோப்பு போட்டு கைகளை சுத்தமாக கழுவிக் கொண்டு, தனது அலுவலகத்திற்குள் சென்று பணிகளை கவனித்தார்.கை கழுவுவதுஎப்படி?முதல்வர் நாராயணசாமி தனது கைகளில் சோப்பு போட்டு 20 வினாடிகளுக்கும் மேலாக பொறுமையாக கழுவினார். விரல் இடுக்குகள் மற்றும் உள்ளங் கையை சுத்தம் செய்தார். அப்போது, சட்ட சபை வாயிலில் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் அலுவலர்களிடம் 'இப்படிதான் மணிக்கட்டு வரை கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்' என அறிவுறுத்தினார். பக்கெட்டில் தண்ணீர் வைப்பதற்கு பதி லாக, எளிதாக நின்று கொண்டு கைகளை கழுவுவதற்கு வசதி யாக குழாய் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X