பொது செய்தி

தமிழ்நாடு

வேலை உறுதி திட்டப்பணிகள் 60 வயதுக்கு மேல் நிறுத்தம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

உடுமலை:உடுமலை ஒன்றியத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலைஉறுதி திட்டப்பணிகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டப்பணியாளர்கள் கடந்த இரண்டாண்டுகளாக விவசாயப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.திட்டத்தில் பயன்பெற வயது வரம்பு இல்லை. இதனால், பல கிராமங்களில் முதியோரும், வேலைஉறுதி பணியாளர்களாக பணி செய்கின்றனர். சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. தமிழகத்திலும், வைரஸ் பாதிப்புகளை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதில் ஒன்றாக முதியவர்களை முடிந்தவரை வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.முதியோருக்கான பாதுகாப்பு நடவடிக்கையாக, உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட சில ஊராட்சிகளில், ஊராட்சி நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர். வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஈடுபடுத்துவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.முதியவர்கள், வீடுகளில் பாதுகாப்புடன் இருப்பதற்கு சில ஊராட்சிகளில் இந்நடவடிக்கை பின்பற்றியுள்ளனர். இதேபோல், அனைத்து ஊராட்சியிலும் தற்காலிகமாக முதியவர்களுக்கு வேலை உறுதி திட்டப்பணிகள் வழங்குவதை நிறுத்தி வைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் முதியோர்களின் பாதுகாப்புக்கு அவசியமாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X