இந்தியா

நாளை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: நாராயணசாமி: முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள்

Added : மார் 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: பிரதமர் அறிவுறுத்தியப்படி, நாளை 22ம் தேதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது;நாடு முழுவதும் கொரோனா தாக்கம், தினந்தோறும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதன் வீரியத்தை கருத்தில் கொண்டு, எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து, பிரதமருடன் ஆலோசிக்கப்பட்டது. மாநில அரசுகள், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்ப்பதன் அவசியம், வெளிநாட்டில் இருந்து வருவோரை கண்காணிப்பது, நம் மக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.கொரோனா அறிகுறியுடன் புதுச்சேரியில் 24ம் பேரும், காரைக்காலில் 3, மாகியில் 4 பேர் மொத்தம் 31 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு 95 சதவீதம் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை வந்துள்ளது.மாகியில் கொரோனா தொற்று பாதித்தவருடன் இருந்த மற்றொரு நபரின் ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்துள்ள 521 பேரும், அவரவர் வீடுகளில் தனி அறையில் இருக்க வலியுறுத்தியுள்ளோம். புதுச்சேரியில் ரூ.17.5 கோடி நிதி ஒதுக்கி, தேவைப்படும் உபகரணம் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 120 படுக்கைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. வென்டிலேட்டர் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது.பிரதமர் நரேந்திரமோடி, கொரோனா மிகப்பெரிய பேரிடர். அதனை தடுக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைக்கின்றனர். மேலும், ஒத்துழைக்க வேண்டும் என கூறியுள்ளார். நாளை 22ம் தேதி, யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி நாளை காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, வெளியே வராமல் வீட்டில் இருங்கள். மாலை 5:00 மணிக்கு, மருத்துவ சேவையில் ஈடுபடுவோரை ஊக்குவிக்க, கை தட்டி ஊக்குவியுங்கள். பிரதமர் கூறியதுபோல், நாம் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்.மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். இதற்காக திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை குறைந்த நபர்களை கொண்டு நடத்திடவும், ஆன்மிக தலங்களில் கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர தேவையின்றி அரசு மருத்துவமனைக்கு வர வேண்டாம்.அரசு அலுவலங்களில், கூட்டத்தை குறைக்க, 50 சதவீத பணியாளர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் 50 சதவீத ஊழியர்களும், அடுத்த வாரம் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றுவர். மருத்துவம், வருவாய்த்துறையினர் கண்டிப்பாக பணியில் இருக்க வேண்டும்.புதுச்சேரியில் புராவிடஸ்ன் மால் மற்றும் போத்தீஸில், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் கடை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முக கவசம் மற்றும் கிருமி நாசினி பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா பரவுவதிற்கு முக்கிய காரணம், வெளிநாட்டினர். நாளை 22ம் தேதி முதல் வெளிநாட்டு விமானங்கள் வர பிரதமர் தடை விதித்துள்ளதால், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X