பொது செய்தி

தமிழ்நாடு

உரசல் ஆரம்பம்! ஊராட்சி தலைவர், அதிகாரிகளிடையேஅதிகார பகிர்வில் தெளிவின்றி சிக்கல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றியங்களில், ஊழியர் நியமனம், உள்ளாட்சி நிர்வாகம் உள்ளிட்ட நடைமுறைகளில், ஊராட்சி தலைவர்கள், அதிகாரிகள் இடையே கருத்து வேறுபாட்டால் உரசல் ஆரம்பித்துள்ளது.
பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றியங்களில் கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடந்து, வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் பதவியேற்றனர்.பதவியேற்று, மூன்று மாதங்கள் முழுதாக முடிவதற்குள், ஒன்றிய அதிகாரிகள் - ஊராட்சி தலைவர்கள் இடையே ஆங்காங்கே உரசல்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம், ஊராட்சி தலைவர்களின் அதிகார வரம்புகளில், பி.டி.ஓ., மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலையிடுவது தான் என புகார் எழுகிறது.குறிப்பாக, ஊராட்சி செயலர்கள் பணி நியமனத்தில் பிரச்னை பெரிதாகியுள்ளது. பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றியங்களில் உள்ள சில ஊராட்சிகளில், ஊராட்சி செயலாளர் காலி பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான நேர்முக தேர்வு, அந்தந்த ஊராட்சி தலைவர் தலைமையில் நடத்தி, தகுதியான விண்ணப்பதாரரை பணி நியமனம் செய்ய மாவட்ட நிர்வாகத்துக்கு ஊராட்சி தலைவர் பரிந்துரை செய்வது நடைமுறையாகும்.
இதில், ஒன்றிய அதிகாரிகள் தலையிட்டு, தாங்கள் சொல்லும் நபரின் பெயரை பரிந்துரைக்கும் படி ஊராட்சி தலைவர்களுக்கு அழுத்தம் அளிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.அதிகாரிகளின் இந்த அத்துமீறல், இந்திய அரசியலைமைப்பு சட்டம், மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு வழங்கியிருக்கும் உரிமைகளையே கேள்விக்குள்ளாக்குகிறது என்றும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, அதிகாரிகளின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஊராட்சி தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது.
அரசியல் தலையீடு!
ஊராட்சி செயலாளர்களுக்கு கடந்தாண்டு முதல், தொகுப்பு ஊதிய முறை மாற்றப்பட்டு, காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. மேலும், பல்வேறு வகையில் வருவாய்க்கு வாய்ப்புள்ளதால், பணியில் சேர ஏகப்பட்ட போட்டி நிலவுகிறது.பல லட்சம் ரூபாய் கொடுத்து பணியில் சேர பலர் தயாராக உள்ளனர். இதனால், ஊராட்சி செயலர் பணி நியமனத்தில், ஒன்றிய அதிகாரிகள் முதல், எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் வரை தலையிடுவதாக கூறப்படுகிறது. இதனால், பல்வேறு விதிமீறல்கள் வெளிப்படையாகவே அரங்கேறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X