பொது செய்தி

தமிழ்நாடு

'குடிமகனை, கொரோனா பாதிக்காது; அரசே இலவசமாக, குவார்ட்டர் தரலாம்!'

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை, : ''மது குடிப்பவனை, கொரோனா தாக்க முடியாது. அரசே, 'குவார்ட்டர்' பாட்டில்களை, இலவசமாக தரலாம்,'' என, நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.

அவர் அளித்த பேட்டி:சினிமாக்காரனை கிள்ளுக்கீரையாக நினைக்க வேண்டாம். சினிமாக்காரனுக்கு ஆதரவாக கேள்வி கேட்க, யாரும் இல்லை. படப்பிடிப்பில் இருந்த விஜயை, வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி, வருமான வரித்துறை, 'ரெய்டு' என்ற பெயரில் கொடுமைப்படுத்தி உள்ளது. இதுகுறித்து, அனைவரும் திரண்டு சென்று, முதல்வரிடம் நியாயம் கேட்க வேண்டும்.ரூபாய் நோட்டு வழியாக கூட, கொரோனா பரவும்; அதற்கு தடை விதிக்க முடியுமா?மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று, தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நிதியுதவி வழங்க வேண்டும். ஓட்டுக்கு பணம் தருவதை போல், வீடு வீடாக சென்று, நிதி வழங்க வேண்டும்.சத்தியமாக சொல்கிறேன்...

நான் மதுவை ஆதரிப்பவன் அல்ல. மது பழக்கம் உள்ளவருக்கு, கொரோனா வராது. ஏற்கனவே, அவனது உடல் உறுப்பு சல்லடையாகி விட்டது; கொரோனா எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது. அதனால், அரசே அனைவருக்கும் இலவசமாக, குவார்ட்டர் பாட்டில்களை தரலாம். கோழிக்கறி, முட்டை சாப்பிடுங்கள்; வியாபாரிகளை வாழ வையுங்கள்.இது, சூடான பூமி; கொரோனா எல்லாம் வராது. இதை பயன்படுத்தி, மக்களை பீதிஅடைய வைக்கின்றனர்.மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்தால், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நிதியுதவி தர வேண்டும். கொரோனா பாதித்த யாராக இருந்தாலும், நான் வந்து, அவர்களுக்கு பணிவிடை செய்ய தயார்.இவ்வாறு, மன்சூர் அலிகான் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X