பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' எதிரொலி; கோவில்களில் தடை

Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'கொரோனா' எதிரொலி; கோவில்களில் தடை

'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கோவில்களில், வழிபாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 'கொரோனா' வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வாகனங்களில் கிருமி நாசினி தெளித்தல்; கை கழுவும் முறை மற்றும் சுகாாதரம் குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அதன் ஒரு கட்டமாக, பொள்ளாச்சி பகுதியில் உள்ள கோவில்களில் பக்தர்கள் வழிபாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள் கோவில், மாரியம்மன் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், பத்ரகாளியம்மன் கோவில், டி.கோட்டாம்பட்டி அம்மணீஸ்வரர் கோவில், மாகாளியம்மன் கோவில் உள்பட பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் பக்தர்கள் வழிபாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.கோவில்கள் முன், 'தமிழக அரசால் தேசிய பேரிடர் என அறிவிக்கப்பட்டு அது தொடர்பான அறிவிப்பு ஒட்டப்பட்டது.பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு கருத்தில் கொண்டு கோவிலில் பக்தர்கள் வழிபாடு தற்காலிகமாக மறு அறிவிப்பு வரைம் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கோவில்களில் இன்று சனிப்பிரதோஷ வழிபாடுகள் நடைபெறாது.இதேபோன்று, சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு, நடை சாற்றப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆகம விதிப்படி, சூலக்கல் மாரியம்மனுக்கு நடைபெறும் அனைத்து பூஜைகளும் வழக்கம்போல் நடக்கிறது.கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவில் மற்றும் சிவலோகநாதர் கோவில்கள் நேற்று முதல் பொதுமக்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.* ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, செவ்வாய், வெள்ளிக்கிழமை மட்டுமின்றி, அமாவாசை, விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அமாவாசை தினங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.மாசாணியம்மன் கோவிலில் கடந்த ஒரு வாரமாக, 'கொரோனா' விழிப்புணர்வு பதாகைகள் வைத்து, கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தனர்.அரசு உத்தரவுப்படி நேற்று முன்தினம் இரவு, கோவில் திறக்கும் தேதி அறிவிக்கப்படாமல் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கோவில் அருகேயுள்ள, வணிகக்கடைகள் பூட்டப்பட்டது.இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரசு உத்தரவுப்படி கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நித்யப்படி பூஜைகள் வழக்கம் போல நடத்தப்படும். பக்தர்களுக்கு அனுமதி இல்லை,' என்றனர். - நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மார்-202016:20:04 IST Report Abuse
Ram Pollachi மக்களை காக்கும் மகேஷனுக்கே ஓய்வா? பல ஜீவன்கள் இந்த திருக் கோவில் உணவை உண்டு வாழ்கிறார்கள். கருப்பராயன் கோவிலுக்கு மதியம் சென்று வாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X