கொரோனா வைரஸ் குறித்து பழங்குடியினருக்கு விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' வைரஸ் குறித்து பழங்குடியினருக்கு விழிப்புணர்வு

Added : மார் 21, 2020
Share
ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, நவமலை பழங்குடியின மக்களுக்கு, 'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, வனத்துறையினர் பயிற்சி அளித்தனர்.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு சின்னாறுபதி, நவமலை செட்டில்மென்டுகளில் வனத்துறையினர், 'கொரோனா' வைரஸ் தடுப்பு முகாம் நடத்தினர்.ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாப்பு காவலர் செல்வம், வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, நவமலை பழங்குடியின மக்களுக்கு, 'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, வனத்துறையினர் பயிற்சி அளித்தனர்.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு சின்னாறுபதி, நவமலை செட்டில்மென்டுகளில் வனத்துறையினர், 'கொரோனா' வைரஸ் தடுப்பு முகாம் நடத்தினர்.ஆனைமலை புலிகள் காப்பக உதவி வனப்பாதுகாப்பு காவலர் செல்வம், வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர், பழங்குடியினருக்கு 'கொரோனா' வைரஸ் குறித்தும், பரவும் முறை, பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தனர். மேலும், கை கழுவும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.ஆழியாறு சோதனைச்சாவடியில், வால்பாறை செல்லும் மக்கள், பஸ் டிரைவர்களுக்கு 'கொரோனா' வைரஸ் குறித்த தகவல்கள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதேபோல், டாப்சிலிப்பில் வனச்சரக அலுவலர் சக்திவேல் தலைமையிலான அதிகாரிகள், செட்டில்மென்ட்டிலும், பஸ் டிரைவர்கள், பயணிகளிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X