பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய ஊராட்சிகளில், துண்டு பிரசுரங்கள் வினியோகித்து, 'கொரோனா' பாதிப்பை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மார்ச் இறுதி நெருங்குவதால், ஊராட்சிகளில் வீட்டுவரி, சொத்து வரி, தொழில்வரி ஆகியன வசூலில், ஊராட்சி செயலாளர்கள் தீவிரமாக உள்ளனர்.இந்நிலையில், வடக்கு ஒன்றியத்தில் கேரளா எல்லையை ஒட்டிய பகுதியில், வாகன சோதனை மற்றும் மருந்து தெளிப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளனர்.பொது இடங்களிலும், வீடு வீடாகவும், 'கொரோனா' விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகித்து, அறிவுரை வழங்கி வருகின்றனர்.காய்ச்சல், இருமல், சளி மற்றும் உடல்சோர்வு மற்றும் மூச்சு திணறல் தொடர்ந்தால், கொரோனா காய்ச்சலுக்கு அறிகுறியாகும்.அறிகுறி கண்ட நபர் இருமும் போதும், தும்மும்போது வெளிப்படும் நீர் திவலைகள் மூலம் நேரடியாக வைரஸ் பரவுகிறது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, தினமும், 10 - 15 முறை கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும். இருமல், தும்மல் வரும்போது, வாய் மற்றும் மூக்கை கர்ச்சீப் கொண்டு மூடிக்கொள்ள வேண்டும்.கிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளும், கிருமிநாசினி கொண்டு, சுத்தமாக பராமரிக்க வேண்டும்.சளி, இருமல் மற்றும் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும்.இளநீர், ஓஆர்எஸ் கரைசல், கஞ்சி போன்ற நீர் சத்து மிகுந்த ஆகாரங்களை பருகுதல் வேண்டும், என, ஊராட்சி துண்டு பிரசுரங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE