பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் கட்டணத்தை குறைக்க அரசு பதிலுக்கு காத்திருப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:நெகமம் பேரூராட்சியில், குடிநீர் வரி வசூல் பணி பாதித்துள்ளது.நெகமம் பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள், வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு கட்டணத்தை, ஆண்டுக்கு ஒருமுறை அலுவலங்களில் செலுத்தி வந்தனர்.கடந்த ஆண்டு திடீரென, 850 ரூபாயாக இருந்த ஆண்டு குடிநீர் கட்டணம், 1,850 ரூபாயாக உயர்த்தப்பட்டது.கடும் அதிருப்தி தெரிவித்த மக்கள், கட்டணத்தை குறைக்க வலியுறுத்தினர்.குடிநீர் கட்டணத்தை, ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என, வலியுறுத்தி, ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசின் பேரூராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு மனு அனுப்பினர். மனுவுக்கான பதில் இதுவரை வராத நிலையில், குடிநீர் கட்டணம் செலுத்தாமல் மக்கள் காத்திருக்கின்றனர். பேரூராட்சி அதிகாரிகள், இம்மாத இறுதிக்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து, நெகமம் பேரூராட்சி செயல் அலுவலர் கூறுகையில், ''வீட்டுவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், 50 சதவீத வரி வசூலாகியுள்ளது.பேரூராட்சி மக்களில் பெரும்பாலானோர், உயர்த்தப்பட்ட குடிநீர் வரியை குறைக்க வலியுறுத்தி, அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர். அதனால், குடிநீர் வரி வசூலாகாமல் உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X