சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சுகாதாரப் பணியாளர்களுக்கு 'கொரோனா' விழிப்புணர்வு

Added : மார் 21, 2020
Share
 சுகாதாரப் பணியாளர்களுக்கு 'கொரோனா' விழிப்புணர்வு

பொள்ளாச்சி:'கையுறை, முகக்கவசம் அணிந்து சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும்,' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில், சுகாதார பணியாளர்களுக்கு, 'கொரோனா' குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நகராட்சி கமிஷனர் காந்திராஜ் தலைமை வகித்தார். நகர்நல அலுவலர் மாணிக்கவேல்ராஜன் முன்னிலை வகித்தார்.சுகாதார ஆய்வாளர்கள் மாரியப்பன், தர்மராஜ், சீனிவாசன், ஜெயபார்வதி, விஜய்ஆனந்த் ஆகியோர், கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டியவை குறித்து, சுகாதார பணியாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், கை கழுவும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், 'நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள், துாய்மையாக இருக்க வேண்டும்; அடிக்கடி கை மற்றும் கால்களை கழுவ வேண்டும்.முகக்கவசம், கையுறை அணிந்து பணியாற்ற வேண்டும். உடல் நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். கொரோனா வைரஸ் பரவாமல் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X