பொது செய்தி

தமிழ்நாடு

மின்தடைக்கு இலவச புகார் மின்வாரியத்தில் நவீன வசதி

Added : மார் 21, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி மின்கோட்டங்களுக்கு உட்பட்ட பொதுமக்கள், மின்தடை ஏற்பட்டால், கணினி மயமாக்கப்பட்ட புகார் மையத்தில் இலவசமாக புகார் பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின்வாரியத்தின் உடுமலை மின் பகிர்மான வட்டத்தின் கீழ், பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி மற்றும் உடுமலை மின் கோட்டங்கள் இயங்கி வருகின்றன. இந்த கோட்டங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர், தங்கள் வீடுகள், வர்த்தக மையங்களில் மின் தடை ஏற்பட்டால், புகார் செய்ய வசதியாக, கணினி மையமாக்கப்பட்ட புகார் மையத்தின் கட்டணமில்லா எண்ணுக்கு அழைத்து, புகார் பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இக்கோட்டங்களுக்கு உட்பட்ட பொதுமக்கள், 1912 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு அழைத்து, மின்தடை குறித்து புகார்கள் பதிவு செய்யலாம். இந்த புகார்கள், தானியங்கி முறையில், சம்மந்தப்பட்ட பகுதி மின் ஊழியர்களுக்கு உடனடியாக தகவல் சென்று, பழுது நீக்கப்படும்.இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு, மின்பழுது நீக்குவதில் நிகழும் கால தாமதத்தை தவிர்க்கலாம் என, மின்வாரியை மேற்பார்வை பொறியாளர் பக்தவச்சலம் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X