பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா' கண்காணிப்பு தீவிரம்: ஊராட்சிக்கு ஒரு அலுவலர் நியமனம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி;பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ஊராட்சிக்கு ஒரு அலுவலர் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.கேரளாவில், 'கொரோனா' வைரஸ், அதிகளவில் பரவியுள்ளது. இதனால், இருமாநில எல்லையாக உள்ள பொள்ளாச்சி நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில், கொரோனா பரவும் அபாயம் அதிகளவில் உள்ளது.கொரோனா பரவுவதை தடுக்க, பாதிப்புக்குள்ளானவர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி சிகிச்சையளிப்பது தான் ஒரே வழியாகும். இதில் சிக்கலானா விஷயம், பாதிக்கப்பட்டவரை கண்டறிவது தான்.காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளை கொண்டு, பாதிக்கப்பட்டவரே முன் வந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டால் கண்டறிய முடிகிறது.பாதிக்கப்பட்டவரை கண்டறியும் நடவடிக்கையில், தெற்கு ஒன்றிய நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்துகிறது.ஒன்றிய ஆணையாளர் சீனிவாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாகிருஷ்ணன் உத்தரவுப்படி, ஊராட்சிக்கு ஒரு கொரோனா பாதிப்பு கண்காணிப்பு அலுவலர் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், அரசுப்பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலர்கள், துப்புரவு பணியாளர்கள், வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகள் உள்ளிட்டவர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.அவர்கள், ஊராட்சியின் குடியிருப்புகளில் யாருக்காவது பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால், கண்காணிப்பு அலுவலருக்கு உடனடி தகவல் தெரிவிப்பர். பிரத்யேக அலுவலர், சுகாதார துறை, ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் அளிப்பார். சம்மந்தப்பட்ட நபர், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பாதிப்பு உறுதி செய்யப்படும்.இந்த செயல் திட்டம், பாதிப்புக்குள்ளானவர்களை அடையாளம் காணும் நடைமுறையை எளிமைப்படுத்தும் என ஒன்றிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'ஊராட்சிகளில் பொது இடங்களில் மக்கள் கூடுவது, குழந்தைகள் பொது இடங்களில் விளையாடுவது, வெளியூர் ஆட்கள் நுழைவது தடை செய்யப்பட்டுள்ளது.'இதை கண்காணிக்க, ஊராட்சி செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விருந்து, விழாக்கள், கேலிக்கைகள் அரசின் மறு உத்தரவு வரும் வரை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.கவுன்சில் கூட்டம் ரத்துதெற்கு ஒன்றிய கவுன்சில் கூட்டம், நேற்று நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, கூட்டம் கூடுவதை தவிர்க்க அரசு அறிவுறுத்தியுள்ளதால், கவுன்சில் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.கூட்டத்தில், கொரோனா பாதுகாப்பு குறித்து பேசப்பட இருந்த விஷயங்கள், தொலைபேசி மூலம் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X