பொது செய்தி

தமிழ்நாடு

கேரள தொழிலாளர்கள் பணியில் இருந்து நிறுத்தம்: தனியார் தொழிற்சாலைகளில் அதிரடி

Added : மார் 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

பொள்ளாச்சி;'கொரோனா' பரவல் பீதியின் காரணமாக, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய ஊராட்சிகளில் இயங்கும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் கேரள தொழிலாளர்கள் பணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளனர்.'கொரோனா' வைரஸ் பாதிப்பு காரணமாக, கேரளாவில் இருந்து வருவோரை கண்டாலே தமிழக மக்களுக்கு பீதி ஏற்படுகிறது.இந்த பீதி, இரு மாநில எல்லையான பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் அதிகமாக உள்ளது. அதன் எதிரொலியாக, கேரளாவில் இருந்து வந்து பணியாற்றும் தொழிலாளர்களை, தொழிற்சாலை நிர்வாகங்கள் பணி நிறுத்தம் செய்துள்ளன. தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கன்பாளையம், சிங்காநல்லுார் பகுதிகளில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு, 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கேரளாவில் இருந்து தினமும் வந்து பணியாற்றுகின்றனர். அவர்கள் மூலம், உள்ளூரில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதால், அவர்களை பணியில் இருந்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.இது குறித்து ஊராட்சி நிர்வாகங்கள் தொழிற்சாலை நிர்வாகங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியது. இதையடுத்து, கேரள தொழிலாளர்கள் தற்காலிகமாக பணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளனர்.இதே போல், கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, பொள்ளாச்சி பகுதியில் இயங்கும் மற்ற தனியார் தொழில் நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மார்-202015:43:12 IST Report Abuse
Ram Pollachi இன்று முதல் பேருந்துக்கள் நிறுத்தப்பட்ட காரணத்தால் பலர் இருசக்கர வாகனத்தில் வந்துவிடுவார்கள். இன்று சனிக்கிழமை வார சம்பளம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X