பொது செய்தி

தமிழ்நாடு

பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவனம் ஈர்க்கும் நிறுவனங்கள்

Added : மார் 21, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் சில தனியார் அலுவலகங்களில், கொரோனா பாதிப்பை தவிர்க்க, பணியாளர்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரசின் கோரத்தாண்டவம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உலக நடப்புகளை கவனிப்போர், இந்த வைரசின் வீரியத்தை கண்டு ஆடிப்போயுள்ளனர்.அவர்கள், நோய் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுகின்றனர்.பொள்ளாச்சியில் செயல்படும் சில தனியார் நிறுவனங்களில், பணியாளர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 'ேஹண்ட் சேனிடசைர்', ேஹண்ட் வாஷ், உள்ளிட்ட நோய் தடுப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.இன்னும் அரசு அலுவலகங்களே இந்த நடைமுறைகளை பின்பற்றாமல் இருக்கும் நிலையில், பொதுநல நோக்கில், ஊழியர்களின் பாதுகாப்பில் அக்கறை காட்டும் தனியார் அலுவலக நிர்வாகங்கள் பாராட்டுகளை பெற்றுள்ளன. இதையே அனைத்து அலுவலகங்கள், நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள், டிரவால்ஸ் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் பின்பற்றினால், ஊழியர்கள் பாதுகாக்கப்படுவதுடன், நோய் பாதிப்பை வெகுவாக தவிர்க்கலாம். இதையே, பிரதமர் மோடியும் அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X