அரசியல் செய்தி

தமிழ்நாடு

'50 நெல் கொள்முதல் நிலையங்கள் ; இ.பி.எஸ்.,

Added : மார் 21, 2020
Share
Advertisement

சென்னை : ''தமிழகம் முழுவதும், 50 இடங்களில், 70 கோடி ரூபாய் மதிப்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.

சட்டசபையில், உணவு துறையில், 110 விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: நெல் உலர் களன், நவீன நெல் சேமிப்பு கொள்கலன் வசதியுடன் கூடிய, நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், தமிழகம் முழுவதும், 50 இடங்களில், 70 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் முப்பது ஆண்டுகளுக்கு மேலான, சேதமடைந்த கிடங்குகளை அகற்றிவிட்டு, உயர் கல்வி நிறுவனமான, சென்னை, ஐ.ஐ.டி.,யின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்பத்துடன், ஒரு லட்சம் டன் கொள்ளளவு உள்ள, புதிய நவீன சேமிப்பு கிடங்குகள், 100 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலுார் மாவட்டங்களில், விவசாயிகளிடம் இருந்து, கொள்முதல் செய்யப்படும் நெல்லை பதப்படுத்தி சேமிக்க, 75 ஆயிரம் டன் கொள்ளளவு உள்ள, நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்துடன் கூடிய, நெல் சேமிப்பு கொள்கலன்கள், 225 கோடி ரூபாயில் அமைக்கப்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு வளாகங்களில், சேதமடைந்த சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகள், 120 கோடி ரூபாயில், சிமென்ட் சாலைகளாக மாற்றப்படும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X