பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு வேளை இலவச உணவு சேவாபாரதி வழங்குகிறது

Added : மார் 21, 2020
Share
Advertisement
கோவை:கோவை சேவாபாரதி, சத்குரு சேவா ஆசிரமம் சார்பில் ஏழைகளுக்கு இன்று முதல் ஒரு வேளை இலவச உணவு வழங்கப்படுகிறது.'கொரோனா' வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், ஏழை மக்கள், பிளாட்பாரங்களில் தங்கியிருப்போர் உணவு கிடைக்காமல் அவதி அடைய வாய்ப்புள்ளது.இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஒரு அங்கமான

கோவை:கோவை சேவாபாரதி, சத்குரு சேவா ஆசிரமம் சார்பில் ஏழைகளுக்கு இன்று முதல் ஒரு வேளை இலவச உணவு வழங்கப்படுகிறது.'கொரோனா' வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், ஏழை மக்கள், பிளாட்பாரங்களில் தங்கியிருப்போர் உணவு கிடைக்காமல் அவதி அடைய வாய்ப்புள்ளது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் ஒரு அங்கமான சேவாபாரதி மற்றும் கோவை ஆர்.எஸ்.புரம் சத்குரு சேவா ஆசிரமம் சார்பில் இன்று முதல் வரும், 31ம் தேதி வரை தினமும் மதியம் இலவச உணவு வழங்குகிறது.மதிய நேரத்தில் இலவச உணவு சாப்பிட விரும்புவோர் ஆர்.எஸ்.புரம், கிழக்கு வேங்கடசாமி ரோடு, சிந்தாமணி பெட்ரோல் பங்க் அருகேயுள்ள சத்குரு ஆசிரமத்திற்கு நேரடியாக சென்று பசி ஆற்றலாம்.
உணவின்றி உள்ள மக்கள் வசிக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்தால், நேரடியாக சென்றும் இலவச உணவு வினியோகம் செய்யப்படும். இதற்காக, 422 -2552034, 96006 68934, 99651 48291 ஆகியதொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இலவச உணவு திட்டத்திற்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட் கள் வழங்குபவர்கள் மேற்குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இத்தகவலை, கோவை சேவாபாரதி தலைவர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X