சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சியில் ரூ. 6 லட்சம் கள்ள நோட்டு பறிமுதல்: சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்; மூவர் கைது

Added : மார் 21, 2020
Share
Advertisement
 பொள்ளாச்சியில் ரூ. 6 லட்சம் கள்ள நோட்டு பறிமுதல்: சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்; மூவர் கைது

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், கள்ள நோட்டு கும்பலின் கார்களை, சினிமா பாணியில் போலீசார் துரத்தி சென்றனர். ஆறு லட்சம் ரூபாய் கள்ள நோட்டு பறிமுதல் செய்து, மூன்று பேரை, கைது செய்தனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த, ஆனைமலை அருகே அய்யாமடை பிரிவில், சந்தேகத்துக்குரிய முறையில், இரண்டு கார்களில் பணம் பரிமாற்றம் செய்வதாக, கோட்டூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றபோது, இரண்டு கார்களும் வேகமாக கிளம்பி சென்றன. 'வாக்கிடாக்கி'யில், பொள்ளாச்சி பகுதி போலீசாரை உஷார்படுத்தினர். வடக்கிப்பாளையம் பிரிவு அருகே, வாகன சோதனையில் ஈடுபட்ட போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் மற்றும் போலீசார், கார்களை வழிமறித்தனர்.ஆனால், வேகமாக வந்த கார்கள், சோதனைக்கு சிக்காமல், வடக்கிபாளையம் ரோடு பாலத்தில் பறந்தன. விடாமல் விரட்டி சென்ற போலீசார், என்.ஜி.ஓ., காலனி அருகே, கார்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, கேரளா மாநிலம் கொழிஞ்சாம்பறையை சேர்ந்த டிரைவர் நசீர், 32; முகமது தன்சீர், 22; ஷெரிப், 20 என்பது தெரிந்தது. ஷெரிப் மற்றும் முகமது தன்சீர் கல்லுாரி மாணவர்கள்.மேலும், ஆறு லட்சம் ரூபாய்க்கு கள்ள நோட்டு எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும்கைது செய்த போலீசார், இரண்டு கார்கள் மற்றும் கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.மிளகாய் பொடி துாவி பறிப்புபோலீசார் கூறியதாவது:பிடிபட்ட மூவரிடம் நடத்திய விசாரணையில், ஆனைமலை அருகே அய்யாமடை பிரிவில் வோல்ஸ்வேகன் கார் (கேஎல் 51 பி 9966) வந்துள்ளது. அப்போது, அங்கு நின்ற வெள்ளை நிற மாருதி காருக்கு கள்ள நோட்டை மாற்றியுள்ளனர்.சிறிது நேரத்தில் அங்கு பைக்கில் வந்த இரண்டு பேர், மிளகாய் பொடியை அவர்கள் மீது துாவி விட்டு, காரில் இருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று, சிறிது துாரத்தில் நின்ற ஆல்டோ (கேஎல் 70 இ 7746) காரில் போட்டு தப்பிச் சென்றுள்ளனர்.கள்ள ரூபாய் நோட்டு பெறுவதற்கு, 'மாருதி' காரில் வந்த கும்பலும், 'எஸ்கேப்' ஆகிவிட்டது.மொத்தம், 500 ரூபாய் கள்ள நோட்டுகளை, ஆறு லட்சம் ரூபாய் அளவுக்கு வைத்துள்ளனர்.பைக்கில் வந்த நபர்கள், காரில் வந்த நபர்கள் அனைவரும் கூட்டாக மற்றொரு காரில் வந்த நபரை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.இவ்வாறு, போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X