இந்தியா

திறப்பு விழா காணாமல் பாழாகும் சமுதாய நலக்கூடம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

திருக்கனுார்: செல்லிப்பட்டு கிராமத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய நலக்கூடம் திறக்கப்பாடாமல் சேதமடைந்து வருகிறது.திருக்கனுார் அடுத்த செல்லிப்பட்டு காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதி மக்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளை குறைந்த செலவில் நடத்திக் கொள்ள, செல்லிப்பட்டு - சோரப்பட்டு மெயின்ரோட்டில் சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.இதற்கிடையே, அப்பகுதியில் இயங்கி வந்த அங்கன்வாடி மையம் சேதமடைந்து இடிக்கப்பட்டதால், தற்காலிகமாக அங்கன்வாடி மையம், சமுதாய நலக்கூடத்திற்கு மாற்றப்பட்டு. நாளடைவில், சமுதாய நலக்கூடமே அங்கன்வாடி மையமாக மாறிவிட்டது.இதனால், அப்பகுதி மக்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளை குறைந்த செலவில் நடத்த முடியாமல், திருக்கனுார் மற்றும் வில்லியனுார் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் அதிக வாடகைக்கு நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, முன்னாள் எம்.பி., கண்ணன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் செல்லிப்பட்டு கிராம நிர்வாக அலுவலகம் அருகே கடந்த 2017ம் ஆண்டு, பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக சமுதாய நலக்கூடம் கட்டுமான பணி துவங்கியது.கட்டுமான பணிகள் முடிவடைந்து, மின் இணைப்பு, தண்ணீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்திய நிலையில், சமுதாய நலக்கூடத்தை திறப்பதற்கு அரசு தேதி வழங்காததால், ஓராண்டிற்கு மேலாக பூட்டியே கிடக்கிறது.இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளை குறைந்த செலவில் நடத்த முடியாமல், சிரமத்திற்குள்ளாகி வருவதுடன், திறக்கப்படாத சமுதாய நலக்கூடம் அப்பகுதி மக்களின் மாடுகளை கட்டும் இடமாக மாறி வருகிறது.எனவே, செல்லிப்பட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X