சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவில்களில் செயின் பறிப்பு: தம்பதி சிறையிலடைப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement
 கோவில்களில் செயின் பறிப்பு: தம்பதி சிறையிலடைப்பு

கோவை:ஆடம்பரமாக வாழ்வதற்காகவே, கோவில் திருவிழாக்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக, இலங்கை தம்பதி, போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.கோவை, கோனியம்மன் கோவில் தேரோட்டம், மார்ச் 4ம் தேதி நடந்தது. கூட்டநெரிசலை பயன்படுத்தி, 10க்கும் மேற்பட்டபெண்களிடம், 35 சவரன் நகை திருடிய, மூன்று பெண்களை பெரியகடை வீதி போலீசார் கைது செய்தனர்.இவர்களிடம் இருந்து, 20சவரன் நகை மீட்கப்பட்டது.சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக், 35, அவரது மனைவி ஜோதி, 32 ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 12 சவரன் நகை கைப்பற்றப்பட்டது.போலீசார் கூறுகையில், 'தம்பதி இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள். சில ஆண்டுகளுக்கு முன் தமிழகம் வந்தனர். இவர்களுக்கு சென்னையை சேர்ந்த மதன்குமார் என்பவர் நகைபறிப்பு குறித்த பயிற்சியை வழங்கினார். நகைப்பறிப்பில் ஈடுபட கொழும்பு, யாழப்பாணத்தில் இருந்து பலரை வரவழைத்துள்ளனர்.மதன்குமார் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் உள்ள கோவில்களில் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். விழாக்கள் இல்லாதபோது, பஸ்சில் செயின்பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். பல்லடம் பகுதியில், பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்து, தற்போது தங்கியுள்ளனர். செயின் பறிப்பில் கிடைக்கும் பணத்தை கொண்டு, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். கும்பல் தலைவனாக இருந்த மதன்குமாரை தேடி வருகிறோம்' என்றனர்.கைது செய்யப்பட்ட தம்பதியை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X