கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விசாரணையின்றி 'வாய்தா': ஆஜராக தேவையில்லை!

Added : மார் 21, 2020
Share
Advertisement

கோவை:'கொரோனா' வைரஸ் பரவாமல் தடுக்க, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கோவை மாவட்ட நீதித்துறை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: வரும் 31 வரை நீதிமன்றங்களுக்கு வக்கீல்கள், வழக்கில் தொடர்புடையவர்கள் யாரும் ஆஜராக தேவையில்லை. அனைத்து வழக்குகளிலும், விசாரணை அழைப்பு இல்லாமல், வாய்தா தேதி போடப்படும். எந்த நீதிமன்றத்திலும், எந்தவித உத்தரவும் வழங்கப்பட மாட்டாது.அனைத்து வழக்கிலும்தற்போதைய நிலை தொடரும். ஜாமின் மனுக்கள் மற்றும் முக்கிய வழக்கில் மட்டும் ஆஜரானால் போதும். மாஜிஸ்திரேட் கோர்ட்களில், ஜாமின் மனுக்கள் மீது, வரும் 23 முதல்31 வரை, காலை 11:30மணிக்கு விசாரணைநடைபெறும். இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X