பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம், சானிடைசர் விரைவில் விலை நிர்ணயம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

திருப்பூர்:அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்கும் வகையில், விரைவில், முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றின் விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் மத்தியில் முகக்கவசங்களை அணியும் பழக்கம், சானிடைசர் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்து வருகிறது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், கடந்த இரு தினங்களாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அதில், கோவையில் உள்ள ஒரு மருந்துக்கடை பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.மருந்தக ஆய்வாளர்கள் கூறியதாவது:'கொரோனா' பீதியால், முகக்கவசம், சானிடைசர் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இவை, தாராளமாக கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் கடைசி வரை இப்பொருட்கள், அத்தியாவசிய பட்டியலிலேயே இருக்கும். சராசரி விற்பனை விலையை விட கூடுதலான தொகைக்கு முகக்கவசம், சானிடைசர் விற்பனை செய்தால், தற்காலிகமாக கடை மூடப்படும். இவற்றின் விற்பனை விலையை நிர்ணயிக்க, 'நேஷனல் பார்மசூட்டிக்கல் பிரைசிங் அத்தாரிட்டி' எனப்படும் தேசிய மருந்துப்பொருள் விலை நிர்ணய அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி, முகக்கவசம், சானிடைசர் தயாரிப்பு நிறுவனங்களிடம் உற்பத்தி செலவு, சராசரி விற்பனை விலை உள்ளிட்ட விவரங்கள் அறிக்கையாக கோரப்பட்டுள்ளன. இவற்றின் விலை, மத்திய அரசால், விரைவில் நிர்ணயம் செய்யப்படும்.இவ்வாறு, மருந்தக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X