இந்தியா

நிழற்குடை சேதம்: பயணிகள் அவதி

Added : மார் 21, 2020
Share
Advertisement

பாகூர்: நோணாங்குப்பம் பஸ் நிறுத்தத்தின், கிழக்கு பகுதியில் புதியதாக பயணியர் நிழற்குடை அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுச்சேரி - கடலுார் சாலையில் நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் பஸ் நிறுத்தத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இரும்பு கம்பிகள் மற்றும் தகர ஷீட் மூலமாக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இது பெயருக்கு மட்டும் தான் பயணியர் நிழற்குடையாக இருந்து வந்தது. குறிப்பாக, மதியம் 12.00 மணி வரை மட்டுமே நிழற்குடையில் நிழல் இருக்கும். இருப்பினும், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், ஏம்பலம், கரையாம்புத்துார் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் மாணவ - மாணவிகளுக்கும், பொது மக்களுக்கும் ஓரளவு பயன்பட்டு வந்தது.இந்நிலையில் நிழற்குடை பராமரிப்பு இல்லாத காரணத்தினால், மூன்றாண்டிற்கு முன் இருக்கைகள் மாயமாகின. தற்போது, போஸ்டர் ஒட்டும் இடமாக மாறியுள்ளது. பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் மழையிலும், வெயிலிலும் கால் கடுக்க நிற்க வேண்டியுள்ளது.

இதனிடையே, அதே பகுதியில், புதுச்சேரி நோக்கி செல்லும் பயணிகளின் வசதிக்காக, மேற்கு பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.அங்கு, காத்திருக்கும் பயணிகள், கடலுார் நோக்கி செல்லும், பஸ்சில் ஏற சாலையை கடந்து வரும் போது விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே, நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் பஸ் நிறுத்தத்தின், கிழக்கு பகுதியில் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X