இந்தியா

ஊசுட்டேரி சாலை சேதம்: விவசாயிகள் அவதி

Added : மார் 21, 2020
Share
Advertisement

காட்டேரிக்குப்பம்: ஊசுட்டேரி நீர்வரத்து வாய்க்கால் சாலை சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.காட்டேரிக்குப்பம், ஊசுட்டேரி நீர்வரத்து வாய்க்கால் கரையோரம் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள், கரும்பு, நெல், சவுக்கை உள்ளிட்டவைகளை பயிரிட்டு வருகின்றனர். இந்த விவசாய நிலங்களுக்கு, ஊசுட்டேரி நீர்வரத்து வாய்க்கால் கரையோரம் பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு மூலம் அமைக்கப்பட்ட தார்சாலையை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், அதிகாரிகளின் போதிய பராமரிப்பு இல்லாததால், தற்போது சாலை மிகவும் சேதமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலைக்கு மாறியுள்ளது. மேலும், இச்சாலையின் இருபுறமும் சீமை கருவேல மர ங்கள் வளர்ந்துள்ளது. சிலர், சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளனர். இதனால், சாலை மிகவும் குறுகலாகியுள்ளதால், வாகனங்கள் மூலம் விளைபொருட்கள் மற்றும் உரமூட்டைகளை கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்துள்ள காட்டேரிக்குப்பம் பகுதி ஊசுட்டேரி நீர்வரத்து வாய்க்கால் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X