இந்தியா

கைக்கிலக்குட்டை கரையில் நடைபாதை அமைக்க கோரிக்கை

Added : மார் 21, 2020
Share
Advertisement

திருக்கனுார்; கூனிச்சம்பட்டு கைக்கிலக்குட்டை கரைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைப்பாதை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூனிச்சம்பட்டு கிராமத்தில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் கைக்கிலக்குட்டை அமைந்துள்ளது. இக்குட்டையில், அக்கிராமத்தில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தேங்கியதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதனையடுத்து, இரண்டு ஆண்டிற்கு முன் தானம் அறக்கட்டளை மற்றும் கிராம மக்கள் பங்களிப்புடன் கைக்கிலக்குட்டை துார் வாரப்பட்டது. ஆனால், குட்டையின் கரையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் நீரும் ஊரும் திட்டத்தின் கீழ் கூனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ள குளங்கள் துார்வாரும் பணியினை துவக்கி வைக்க வந்த, கலெக்டர் அருணிடம் கைக்கிலக்குட்டையின் கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள், நற்பணி மன்ற நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து, கலெக்டர் அருண், கைக்கிலக்குட்டையின் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால், இதுவரையில் கைக்கிலக்குட்டையின் கரை ஆக்கிரமிப்புகள் ் அகற்றப்படவில்லை. மாறாக கரையில் குப்பை மற்றும் மாட்டு சாணங்கள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் தொடர்ந்து குட்டையில் கலந்து வருவதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு தொல்லை அதிகரித்து மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, கூனிச்சம்பட்டு கைக்கிலக்குட்டையின் கரை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கரையில் நடைபாதை அமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X